Baby Birth Star शतभिषा / சதயம் / శతభిష
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கோ,ஸ,ஸி,ஸு,தோ,தௌ என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Shathabhisha शतभिषा శతభిష | Chathayam / Sadayam சதயம் | Chathayam | ,
சதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: கோ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: ஸி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: ஸு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுஇவர்கள் தங்களது நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும்.
தெற்காசியா முழுவதும் கட்டி ஆண்டு, வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டிய மாமன்னன் ராஜ ராஜ சோழன் பிறந்த நட்சத்திரம் சதய நட்சத்திரம்.
சதய நட்சத்திரம் பூங்கொத்து மற்றும் வட்ட வடிவம் போன்று இருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவற்றை தங்கள் தொழில் மற்றும் வணிகத்திற்கான லோகோவாக பயன்படுத்தலாம்.
சதயம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்
ராகு பகவானின் ஆதிக்கம் கொண்ட சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல உடல்வலிமையும் மனோதிடமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நன்கு சிந்தித்து செயல்படக்கூடிய திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். எல்லோரையும் சரிசமமாக நடத்துவார்கள். பல நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று அதிகளவில் செல்வம் ஈட்டக்கூடிய திறமை கொண்டவர்கள். பிறரின் தயவின்றி வாழ முயற்சிப்பார்கள்.