#

இசுலாமியக் குழந்தைப் பெயர்கள்

Tamil Baby Names

தமிழில் முஸ்லிம் குழந்தைகளுக்கான பெயர்கள்

இஸ்லாமிய மார்கத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சார வழக்கப்படி சூட்டப்படும் அழகிய பெயர்கள் பொருளுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Muslim Baby Names

முஸ்லிம் குழந்தை பெயர்கள்

குழந்தை பெயர்கள் பட்டியலில் இங்கு ஆண் குழந்தை பெயர் தேடல் மற்றும் பெண் குழந்தை பெயர் தேடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Muslim Baby Names in Tamil

குழந்தைக்கு பெயர் வைப்பது எப்படி?

இஸ்லாமிய மார்கத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும்?


இஸ்லாமிய மார்கத்தில் பிறந்த குழந்தைக்கு பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும்.


அகீகா என்றால் குழந்தைக்காக ஆட்டை அறுத்து குர்பான் கொடுப்பதாகும்.
“குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது. குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்”. திர்மிதி 1442.


குழந்தைப் பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும்,பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும். ஏழாம் நாள் அகீகா கொடுக்க வசதியில்லா விட்டால், பிறகு கொடுக்க தேவை இல்லை.


குழந்தை பிறந்த உடன், அதன் காதில் முதல் சப்தமாக பாங்கு கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும், சொல்லப் படுகிறது.