Baby Birth Star अनुराधा / அனுஷம் / అనురాధ
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு ந, நி, நு, நே என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைக்க வேண்டும். அதன் அடிப்படையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.
Find names / Search Names by meaning, newborn new unique names, name and their meaning.
Star Name | Tamil | Malayalam |
---|---|---|
Anuraadha अनुराधा అనురాధ | Anusham அனுஷம் | Anizham | ,
அனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்
முதல் பாதம்: ந என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-ம் பாதம்: நி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-ம் பாதம்: நு என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-ம் பாதம்: நே என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்ததுநட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது இவர்களுக்கு நல்லது.
அனுஷம் ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள், நட்சத்திர தாரபலன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஒரு வித்யாசமான சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக அமைதியை விரும்புபவர்கள். அதே நேரத்தில் நியாயத்துக்காக போராடவும் தயங்காதவர்கள். பிறருக்கு தானம் அளிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள்.