திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.
Marriage Matching\Rasi\Vruschika
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவானாவார். விருச்சிகம் ராசியில் விசாகம்நட்சத்திரத்தின் 4ம் பாதமும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்கள் இதில் அடங்கும். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம் ராசி நட்சத்திரம் | பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் | பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் |
---|---|---|
விசாகம் (பாதம் 4) | விசாகம் (பாதம் 4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் சதயம் |
விசாகம் (பாதம் 4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், சித்திரை |
அனுஷம் | அனுஷம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம் |
அனுஷம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி |
கேட்டை | கேட்டை - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் திருவோணம், அனுஷம் |
கேட்டை - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் கார்த்திகை 2, 3, 4 |
விருச்சிக ராசியினர் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். எதையும் விடாபிடியாக நின்று சாதிப்பார்கள். பார்பதற்கு அப்பாவித்தனமான முகத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடயதை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டார்கள். வாய் ஜாலம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசி ஜெயிப்பது கடினம்.
விருச்சிக ராசியினர் எளிதில் உணர்ச்சி வசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் முன் கோபம் அதிகம் இருக்கும். எத்தனை தோல்விகள் வந்தாலும் விடாபிடியாக நின்று முடித்து காட்டுவார்கள். இவர்கள் சேமிப்பில் அதிக அக்கறை கொண்டவர்கள். யாருடைய பணமாவது இவர்கள் கைகளில் புழங்கிகொண்டே இருக்கும். .
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சமுக சேவைகளில் அதிக ஈடுபாடு இருக்கும். அதே போல தான தர்மங்கள் செய்வதிலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. இளமையில் கஷ்டமான வாழ்க்கை அமைந்தாலும் நடுத்தர வயதில் சுக போகமான வாழ்கை வாழ்வார்கள்.