#

ரிஷபம் ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

ரிஷபம் ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Vrishabha

ரிஷபம் இராசி திருமண பொருத்தம் 2021

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவானாவார். ரிஷப ராசியில் கிருத்திகை முதல் பாதம், ரோகிணி, மிருக சீரிஷம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை கவரும் வண்ணம் அழகான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். நல்ல கம்பீரமான தோற்றமும், நடுத்தரமான உயரமும் கொண்டவர்கள்.


ரிஷபம் ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை (பாதம் 2,3,4)கார்த்திகை (பாதம் 2,3,4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
கார்த்திகை (பாதம் 2,3,4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
சதயம்
ரோகிணிரோகிணி - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
ரோகிணி - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
மிருகசீரிடம் (பாதம் 1,2)மிருகசீரிடம் (பாதம் 1,2) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
மிருகசீரிடம் (பாதம் 1,2) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

ரிஷப ராசிகாரர்கள் சாமர்த்தியமாகவும், வேடிக்கையாகவும் பேசுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். பொதுவாக கூச்ச சுபாவமுடையவர்கள். ஆபார ஞாபக சக்தி கொண்டவர்கள். எப்போதும் சுத்தமாக இருக்க விரும்புவார்கள். கஷ்டம் வந்துவிட்டால் அதைதாங்க கூடிய பொறுமையும், சகிப்புதன்மையும் கொண்டிருப்பார்கள்.

எல்லோரையும் அனுசரித்து செல்வார்கள். அன்னையின் மேல் மிகுந்த அன்பை கொண்டிருப்பார்கள். யாரையும் தேவையில்லாமல் பகைத்து கொள்ள மாட்டார்கள். இயற்கையான சூழ்நிலையை அதிகம் விரும்புவார்கள். சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை சுமப்பார்கள். இவர்களில் பெரும்பலோனருக்கு திருமணம் சிறிது காலம் தாழ்ந்துதான் நடைபெறும்.

ரிஷப ராசிகாரர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். கலைத்துறை, மற்றும் இசைத்துறையில் நாட்டம் அதிகம் இருக்கும். இவர்கள் மத்திய வயதில் தான் சுக போகமான வாழ்வு அமையும். இவர்கள் மற்றவர்களுக்கு வழிய உதவி செய்வதால் சில சமயங்களில் பிரச்சனைகளில் சிக்கி கொள்வார்கள்.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.