திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.
Marriage Matching\Rasi\Simha
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவானாவார். சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், ஆகியவை இதில் அடங்கும். சிம்ம ராசிக்காரர்கள் அழகான அங்க அடையாளங்களை கொண்டிருப்பார்கள். பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு வித கம்பீரம் இருக்கும்.
சிம்மம் ராசி நட்சத்திரம் | பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் | பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் |
---|---|---|
மகம் | மகம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் சித்திரை, அவிட்டம் 3, 4 |
மகம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் சதயம் |
பூரம் | பூரம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம் |
பூரம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி |
உத்திரம் (பாதம் 1) | உத்திரம் (பாதம் 1) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம் |
உத்திரம் (பாதம் 1) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம் |
சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபம் அதிகம் இருக்கும். எல்லா விஷயங்களிலும் வேகமாக செயல்படுவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் வீரமும், நெஞ்சு உறுதியும் அதிகம் கொண்டவர்கள். எதற்கும் அஞ்சாத பேர்விழிகள். அன்பு, பணிவு, மரியாதை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர்கள். இவர்கள் எதிரிகளை கூட மன்னிப்பார்கள், ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களில் பெரும்பலனோர்க்கு பண வசதிக்கு குறைவு இருக்காது. இவர்கள் தற்புகழ்ச்சி உடையவர்கள். இவர்களிடம் மிரட்டி வேலை வாங்குவதை விட அன்பாக பேசி வேலை வாங்குவது எளிது.
சிம்ம ராசிக்கரர்கள் விடாமுயற்சி அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். பிறர் செய்யும் சிறு தவறை கூட பெரிதாக்கி அவர்களை தண்டிப்பார்கள். இவர்கள் பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள்.