#

மீனம் ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

மீனம் ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Meena

மீனம் இராசி திருமண பொருத்தம் 2021

மீன ராசியின் அதிபதி குரு பகவானாவார். மீன ராசியில் பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரம் இந்த ராசியில் அடங்கும். மீன ராசியில் பிறந்தவர்கள் கம்பீரமான தோற்றத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சிரித்த முகத்துடன் காட்சி தருவார்கள்.


மீனம் ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
பூரட்டாதி (பாதம் 4)பூரட்டாதி (பாதம் 4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
பூரட்டாதி (பாதம் 4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
உத்திரட்டாதிஉத்திரட்டாதி - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
உத்திரட்டாதி - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
ரேவதிரேவதி - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
ரேவதி - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

மீன ராசிக்காரர்கள் எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் மறுபடி அவர்களை சீண்டவே மாட்டார்கள். இவர்கள் வாய் சாதுர்யம் மிக்கவர்கள். எதையும் பேசி பேசியே சாதித்து கொள்வார்கள். ஆனால் இவர்களால் ரகசியங்களை காக்க முடியாது. இவர்கள் பொறுமையானவர்களாகவும் அதே சமயம் திறமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மீன ராசிக்காரர்கள் தேவையில்லாமல் பேசி வம்பை விலைக்கு வாங்கி கொள்வார்கள். பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனம் கொண்டவர்கள்.

மீன ராசிக்காரர்கள் தெய்வ பக்தி கொண்டவர்கள். பெரியோர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தெய்வ காரியங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இந்த ராசியில் பிறந்த பலரும் சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் கடினமாக உழைத்தே செல்வதை சேர்ப்பார்கள்.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.