திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.
Marriage Matching\Rasi\Makar
மகர ராசியின் அதிபதி சனி பகவானாவார். மகர ராசியில் உத்திராடம் 1, 2, 3 பாதங்களும், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். மகர ராசிகார்கள் பொதுவாக விடமுயற்சி உடையவர்கள். இவர்கள் பொறுமையாகவே எல்லா விஷயங்களையும் செய்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே யோசித்து கொண்டே இருப்பார்கள்.
மகரம் ராசி நட்சத்திரம் | பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் | பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் |
---|---|---|
உத்திராடம் (பாதம் 2,3,4) | உத்திராடம் (பாதம் 2,3,4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2 |
உத்திராடம் (பாதம் 2,3,4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம் |
திருவோணம் | திருவோணம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம் |
திருவோணம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம் |
அவிட்டம் (பாதம் 1,2) | அவிட்டம் (பாதம் 1,2) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம் |
அவிட்டம் (பாதம் 1,2) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் கார்த்திகை 1, மூலம் |
மகர ராசிகார்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிரிகளுக்கும் உதவி தேவை என்ற நிலை வந்துவிட்டால் பகையை மறந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம், துன்பம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எல்லா விஷயங்களிலும் ஆதாயம் அடைய நினைப்பார்கள். இவர்கள் சமயங்களில் நகைச்வையாளராக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள்.
மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள். இவர்கள் அடம்பரமாக வாழ வீண் செலவு செய்வார்கள்.
மகர ராசிகார்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.