#

கும்பம் ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

கும்பம் ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Kumbha

கும்பம் இராசி திருமண பொருத்தம் 2021

கும்ப ராசியின் அதிபதி சனி பகவானாவார். கும்ப ராசியில் அவிட்டம் 3, 4 பாதங்களும், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் ஆகியவை அடங்கும். கும்ப ராசிக்காரர்கள் குடத்தில் இட்ட விளக்கை போல பிரகாசிப்பார்கள்.


கும்பம் ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
அவிட்டம் (பாதம் 3,4)அவிட்டம் (பாதம் 3,4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
அவிட்டம் (பாதம் 3,4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை, சதயம், மகம், மூலம்
சதயம்சதயம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
சதயம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
பூரட்டாதி (பாதம் 1,2,3)பூரட்டாதி (பாதம் 1,2,3) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
பூரட்டாதி (பாதம் 1,2,3) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

கும்ப ராசிக்காரர்கள் உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இருக்கும் இடத்திலேயே நிலையான தொழிலை அமைத்துக் கொள்ளும் அளவுக்கு திறமை கொண்டவர்கள். இவர்கள் மிக பெரிய தைரியசாலிகள். இவர்கள் அன்பான, சாந்தமான, தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிடித்தவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இவர்கள் பிடிக்காதவர்களை குப்பையாக கூட மதிக்க மாட்டார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் பேச்சுக்கு எந்த இடத்திலும் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உண்மையே பேச வேண்டும் என நினைப்பார்கள். உடன் பழகுபவர்களின் மனதை அறிந்து செயல்படுபவர்கள். ஒரு காரியத்தை இவர்களிடம் ஒப்படைத்தால் அது முடிந்து விடும் என நினைத்து கொள்ளலாம். கண்ணும் கருத்துமாக இருந்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். யாருடைய அந்தரங்க பிரச்சனையிலும் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தின் மீது அதிக பற்றுதல் இருக்கும். தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் மேல் அதிக பாசம் கொண்டவர்கள். ஆடம்பரமாக செலவு செய்வது இவர்களுக்கு பிடிக்காது. சுகத்தையும், சோகத்தையும் சமமாக பாவிப்பார்கள். இவர்கள் முன் கோபம் அதிகம் கொண்டவர்கள்.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.