#

கடகம் ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

கடகம் ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Kataka

கடகம் இராசி திருமண பொருத்தம் 2021

கடக ராசியின் அதிபதி சந்திர பகவானாவார். கடக ராசியில் புனர்பூசம் நட்சத்திரத்தின் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கும். கடக ராசிக்காரர்கள் பெரியோர்களிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். கடவுள் பக்தி அதிகம் இருக்கும்.


கடகம் ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
புனர்பூசம் (பாதம் 4)புனர்பூசம் (பாதம் 4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
புனர்பூசம் (பாதம் 4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
பூசம்பூசம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
பூசம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
ஆயில்யம்ஆயில்யம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
அஸ்தம், அனுஷம், பூசம்
ஆயில்யம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
சித்திரை, அவிட்டம் 1, 2

கடக ராசிக்காரகள் எதில் கைவைத்தாலும் அதை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள். இவர்களுக்கு ஆளுமைத்தன்மை அதிகம் இருக்கும். பிறரை தன் பால் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்டவர்கள். ஏற்று கொண்ட வேலையை முடிக்காமல் விட மாட்டார்கள். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற வேண்டும் என விரும்புவார்கள். இவர்களால் தன் சகோதர, சகோதரிகளுக்கே லாபமே தவிர அவர்களால் இவர்களுக்கு லாபம் கிடையாது.

இவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். எல்லா விஷயத்தையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. இரக்க குணம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசபடகூடியவராகவும், அதனால் வருந்துபவராகவும் இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். கள்ளம் கபடம் இல்லாத வெகுளியான மனது கொண்டவர்கள்.

கடக ராசிகார்க்களுக்கு குடும்பத்தின் மீது அதிக அக்கறை உண்டு. குடும்பத்திற்காக எதையும் விட்டு கொடுப்பார்கள். சுகபோகமான வாழ்க்கை வாழ ஆசைபடுவார்கள். எந்த நேரத்திலும் யாருடைய பணமாவது இவர்கள் கைகளில் இருந்து கொண்டே இருக்கும். இவர்களிடம் சேமிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளில் சென்று பணம் ஈட்டுவார்கள். பொது காரியங்களுக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இவர்கள் கவனமுடன் இருபது நல்லது.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.