#

கன்னி ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

கன்னி ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Kanya

கன்னி இராசி திருமண பொருத்தம் 2021

கன்னி ராசியின் அதிபதி புதன் பகவானாவார். கன்னி ராசியில் உத்திரம் 2, 3, 4ம் பாதங்களும், அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தின் 1,2, பாதங்கள் ஆகியவை அடங்கும். இவர்களின் தோற்றத்தை வைத்து வயதை எடை போட முடியாது. தங்களை இளமையாக வைத்து கொள்ள விரும்புவார்கள்.


கன்னி ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
உத்திரம் (பாதம் 2,3,4)உத்திரம் (பாதம் 2,3,4) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
பூராடம், திருவோணம், ரேவதி
உத்திரம் (பாதம் 2,3,4) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
அஸ்தம்அஸ்தம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
அஸ்தம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
சித்திரை (பாதம் 1,2)சித்திரை (பாதம் 1,2) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
சித்திரை (பாதம் 1,2) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
கார்த்திகை 2, 3, 4, மகம்

கன்னி ராசிகாரர்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாக இருபதையே விரும்புவார்கள். யாரையும் புண்படுத்தும்படி பேச மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி கொள்ள கூடியவர்கள். இவர்கள் வசீகரமான தோற்றத்தை கொண்டவர்கள். கூடவே ன்னனடதையும் உள்ளவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

இவர்கள் பேச்சாற்றலும், அறிவாற்றலும் ஒருங்கே கொண்டவர்கள். தன்னை தாழ்த்தி கொண்டு பிறரை உயர்த்தும் குணம் கொண்டவர்கள். இவர்கள் சுகமாக இருப்பதையே விரும்புவார்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை பற்றி கவலை படமாட்டார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை கலந்தலோசித்தே எல்லாவற்றையும் முடிவு செய்வார்கள். இவர்கள உடலுழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள். இவர்களை அவமானபடுத்தினால் தாங்கி கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கு பணவரவில் குறைவு இருக்காது. இவர்களுக்கு சோம்பலாக இருபது பிடிக்காது. கடன் வாங்குவதை விரும்ப மாட்டார்கள். சிக்கனமாக செலவு செய்வார்கள். கிடைக்காத பொருளுக்கு ஆசை படமாட்டார்கள். இருப்பதாய் கொண்டு திருப்தி அடைய கூடியவர்கள். இவர்களுக்கு வீண் செலவு செய்வது பிடிக்காது. இவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள விரும்புவார்கள்.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.