#

தனுசு ராசி & நட்சத்திரம் - திருமண பொருத்தம் வழிகாட்டி

ராசி  திருமண பொருத்தம்

தனுசு ராசி திருமண பொருத்தம்

திருமண ஜோடிகளுக்கு நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பது வழக்கம், அப்படிப்பார்க்கப்படும் ஆண்களுக்கு நட்சத்திரத்திற்குப் பொருந்தும் பெண் நட்சத்திரங்களும், பெண் நட்சத்திரத்திற்குப் பொருந்தும் ஆண் நட்சத்திரங்களும் இங்கு பார்ப்போம்.

Marriage Matching\Rasi\Dhanus

தனுசு இராசி திருமண பொருத்தம் 2021

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். தனுசு ராசியில் மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. தனுசு ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலோனோர் நல்ல உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கவர்ச்சிகரமான உடலமைப்பை கொண்டவர்கள்.

தனுசு ராசி நட்சத்திரம்பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
மூலம்மூலம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
மூலம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
பூராடம்பூராடம் - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
பூராடம் - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
உத்திராடம் (பாதம் 1)உத்திராடம் (பாதம் 1) - நட்சத்திரம் ஆண்களுக்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
உத்திராடம் (பாதம் 1) - நட்சத்திரம் பெண்களுக்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

தனுசு ராசிகார்களிடம் தற்பெருமை அதிகம் இருக்கும். தன்னைதானே உயர்த்தி பேசிகொள்வார்கள். இவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் அவர்கள் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன் கூட்டியே அறிய கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.

தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும். இவர்களிடம் நயமாக பேசினால் எதையும் சாதித்து கொள்ளலாம். தெய்வ பக்தி, கருணை, தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.

தனுசு ராசிகார்கள் பிறர் பிரச்சனையை தன் பிரச்சனை என கருதி அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள். அதனால் பிரச்சனைகளிலும் மாட்டி கொள்வார்கள். தனுசு ராசிகார்ரகள் பெரும்பாலோனோர் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் உழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள்.


ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம் ... ,ராசி, நட்சத்திர பொருத்தம் - ராசிவாரியாக முழு அட்டவணை,

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.