#

ராசி & நட்சத்திரம் - குழந்தைப் பெயர் வழிகாட்டி 2021

Boy Baby Names

சிம்மம் ராசி குழந்தை பெயர்கள் 2021

குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற சிம்மம் ராசி, நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Baby Birth Rashi

சிம்மம் ராசி பெயர்கள் 2021

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவானாவார். சிம்ம ராசியில் மகம், பூரம், உத்திரம் நட்சத்திரத்தின் 1ம் பாதம், ஆகியவை இதில் அடங்கும். சிம்ம ராசிக்காரர்கள் அழகான அங்க அடையாளங்களை கொண்டிருப்பார்கள். பேச்சிலும், நடவடிக்கைகளிலும் ஒரு வித கம்பீரம் இருக்கும்.


ஆண் குழந்தைபெண் குழந்தைLetters
மகம் மகம் MA, MI, MU, ME
ம, மி,மு, மெ
பூரம் பூரம் MO, TA, TI, TU
மோ,ட, டி,டு
உத்திரம் (பாதம் 1) உத்திரம் (பாதம் 1) TE
டே

சிம்ம ராசிக்காரர்கள் முன்கோபம் அதிகம் இருக்கும். எல்லா விஷயங்களிலும் வேகமாக செயல்படுவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். இவர்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டார்கள். எந்த விஷயத்திலும் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் வீரமும், நெஞ்சு உறுதியும் அதிகம் கொண்டவர்கள். எதற்கும் அஞ்சாத பேர்விழிகள். அன்பு, பணிவு, மரியாதை அனைத்தையும் ஒரு சேர கொண்டவர்கள். இவர்கள் எதிரிகளை கூட மன்னிப்பார்கள், ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பேச்சில் ஒரு தெளிவு இருக்கும். இவர்களில் பெரும்பலனோர்க்கு பண வசதிக்கு குறைவு இருக்காது. இவர்கள் தற்புகழ்ச்சி உடையவர்கள். இவர்களிடம் மிரட்டி வேலை வாங்குவதை விட அன்பாக பேசி வேலை வாங்குவது எளிது.

சிம்ம ராசிக்கரர்கள் விடாமுயற்சி அதிகம் கொண்டவர்கள். இவர்கள் வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டை என்று வந்துவிட்டால் இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார்கள். இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். பிறர் செய்யும் சிறு தவறை கூட பெரிதாக்கி அவர்களை தண்டிப்பார்கள். இவர்கள் பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள்.


மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.