குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற மேஷம் ராசி, நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Baby Birth Rashi
ஆண் குழந்தை | பெண் குழந்தை | Letters |
---|---|---|
அஸ்வினி | அஸ்வினி | CHU,CHE,CHO,LA சு, சே,சோ, ல, லா,சை |
பரணி | பரணி | LI, LU, LE, LO லி, லு,லே,லோ, சொ,சௌ |
கார்த்திகை (பாதம் 1) | கார்த்திகை (பாதம் 1) | A,AA அ, ஆ |
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே மேஷ ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளையும் சந்திப்பார்கள்.
மேஷ ராசியில் பிறந்தவர்கள் வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார். பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமையிலும் முதன்மையாக இருப்பார். இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
இவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி சரி என வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள் இவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்கள்.
தான் ஏற்றுகொண்ட பணிகளில் எவ்வளவு தடைகள் வந்தாலும் பொறுமையுடன் இருந்து அதை முடித்தும் காட்டுவார்கள். இவர்களுக்கு கோபம் அதிகம் வரும். கோபத்தில் மன அமைதியை இழந்து விடுவார்கள்.
அஸ்வினி நட்சத்திரத்திற்கான பொது பலன்கள்
அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.நட்சத்திர கணம் (குணம்)- தேவகணம்
விருச்சம் – எட்டி (பாலில்லா மரம்)
மிருகம் – ஆண் குதிரை
பட்சி – ராஜாளி
கோத்திரம் – பரத்துவாசர்
பரணி நட்சத்திரத்திற்கான பொது பலன்கள்
மேஷ ராசியில் பரணி நடத்திரத்தின் நான்கு பாதங்கள் அமைந்துள்ளன. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் தரணியை ஆள்வார்கள் என்பது பழமொழி.
செவ்வாய் பகவான் ஆட்சி செய்யக்கூடிய மேஷ ராசியில் இருக்கும் பரணி நட்சத்திர அதிபதியாக சுக்கிர பகவான் இருக்கிறார்.
இவர்கள் மனதில் தோன்றும் கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள். அதே சமயம் தங்களின் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
பரணி நட்சத்திர அதிதேவதை - துர்க்கை அம்மன்
பரிகார தெய்வம் - துர்க்கை அம்மன்
நட்சத்திர குணம் - மனுஷகணம்
நட்சத்திரத்திற்குரிய மரம் (விருட்சம்) - நெல்லி (பாலில்லா மரம்)
மிருகம் - ஆண் யானை
பட்சி (பறவை) - காகம்
கோத்திரம் - விசுவாமித்திரர்
திருமண பொருத்தம் - பரணி நட்சத்திரத்துடன் இணையக்கூடாத நட்சத்திரங்கள்
பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி