#

ராசி & நட்சத்திரம் - குழந்தைப் பெயர் வழிகாட்டி 2021

Boy Baby Names

மகரம் ராசி குழந்தை பெயர்கள் 2021

குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற மகரம் ராசி, நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Baby Birth Rashi

மகரம் ராசி பெயர்கள் 2021

மகர ராசியின் அதிபதி சனி பகவானாவார். மகர ராசியில் உத்திராடம் 1, 2, 3 பாதங்களும், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். மகர ராசிகார்கள் பொதுவாக விடமுயற்சி உடையவர்கள். இவர்கள் பொறுமையாகவே எல்லா விஷயங்களையும் செய்வார்கள். இவர்கள் எப்பொழுதுமே யோசித்து கொண்டே இருப்பார்கள்.


ஆண் குழந்தைபெண் குழந்தைLetters
உத்திராடம் (பாதம் 2,3,4) உத்திராடம் (பாதம் 2,3,4) BO, JA, JE
போ,ஜ, ஜி
திருவோணம் திருவோணம் JU, JAY, JO, GHA
ஜீ,ஜூ,ஜே,ஜோ,கா
அவிட்டம் (பாதம் 1,2) அவிட்டம் (பாதம் 1,2) GA, GI
க, கீ

மகர ராசிகார்களின் பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிரிகளுக்கும் உதவி தேவை என்ற நிலை வந்துவிட்டால் பகையை மறந்து உதவி செய்வார்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம், துன்பம் வந்தாலும் அலட்டி கொள்ள மாட்டார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். எல்லா விஷயங்களிலும் ஆதாயம் அடைய நினைப்பார்கள். இவர்கள் சமயங்களில் நகைச்வையாளராக மாறி மற்றவர்களை சிரிக்கவும் வைப்பார்கள். இவர்கள் வெகுளித்தனமான வெள்ளை மனம் கொண்டவர்கள்.

மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள். வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள். இவர்கள் அடம்பரமாக வாழ வீண் செலவு செய்வார்கள்.

மகர ராசிகார்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.


மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்,

உணவே மருந்து, மருந்தே உணவு, நோய் தீர்க்கும் காய்கறிகள், மூலிகை உணவுகள்.