குழந்தையின் ராசி அல்லது பிறந்த நட்சத்திரத்தின் படி பெயரிடப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த போது சந்திரன் நின்ற தனுசு ராசி, நட்சத்திரத்திற்குறிய எழுத்தினை பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டு பெயர் சூட்டப்படும் போது குழந்தையின் வாழ்வு மங்களகரமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
Baby Birth Rashi
ஆண் குழந்தை | பெண் குழந்தை | Letters |
---|---|---|
மூலம் | மூலம் | YE, YO, BA, BI யே,யோ,ப, பி |
பூராடம் | பூராடம் | BU, DHA, BHA, DA பு, பூ, த,ப, ட |
உத்திராடம் (பாதம் 1) | உத்திராடம் (பாதம் 1) | BE பே |
தனுசு ராசிகார்களிடம் தற்பெருமை அதிகம் இருக்கும். தன்னைதானே உயர்த்தி பேசிகொள்வார்கள். இவர்கள் அதிக நண்பர்களை பெற்றிருப்பார்கள். யாராவது இவர்களை அவமானபடுத்தினால் அவர்கள் எப்பேற்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை விட்டு விலகி விடுவார்கள். எடுத்து கொண்ட செயல்களில் தோல்வி அடைந்தால் எளிதில் துவண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் நடக்க கூடியதை முன் கூட்டியே அறிய கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
தனுசு ராசிகார்கள் பொதுவாக சுறுசுறுப்பானவர்கள். கள்ளம் கபடமின்றி எல்லோரிடமும் நன்றாக பழகுவார்கள். இவர்கள் யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் எளிதில் கோபப்பட மாட்டார்கள், கோபம் வந்தால் அது கடுமையானதாக இருக்கும். இவர்களிடம் நயமாக பேசினால் எதையும் சாதித்து கொள்ளலாம். தெய்வ பக்தி, கருணை, தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.
தனுசு ராசிகார்கள் பிறர் பிரச்சனையை தன் பிரச்சனை என கருதி அவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்கள். அதனால் பிரச்சனைகளிலும் மாட்டி கொள்வார்கள். தனுசு ராசிகார்ரகள் பெரும்பாலோனோர் வசதியான குடும்பங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள். உடல் உழைப்பை அதிகம் விரும்ப மாட்டார்கள்.