தமிழ் சிறுவர் கதைகள் இதில் சுவையான பல கதைகள் உள்ளன
story for kids tamil
சிறிய குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு மிகவும் பிடிக்கும், அவர்களுக்காக சிறுவர் கதைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Home /Bedtime Storiesஒரு ஊர்ல ரெண்டு பூனைகள் வாழ்ந்துகிட்டு இருந்துச்சு, அதுங்க ரெண்டும் ஒற்றுமையா ஒன்னாவே உணவு தேடி சாப்பிட்டு வந்துச்சுங்க.
ஒருநாள் அதுகளுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்கல ,ரொம்ப நேரம் உணவு தேடி அலைஞ்சதுக்கு அப்புறமா ஒரு பழ துண்டு கிடைச்சது.
ரொம்ப பசியில இருந்த ரெண்டு பூனைகளுக்கும் அந்த பழ துண்டை ரெண்டுபேரும் தங்களுக்கு அதிக பங்க எடுத்துக்கிடணும்னு அசைப்பட்டுச்சுங்க.
அதனால ரெண்டு பூனைகளுக்குள் சண்ட வந்துடுச்சு ,அப்பத்தான் அதுங்களுக்கு ஒரு யோசனை வந்துச்சு.
தங்களுக்கு தெரிஞ்ச ஒரு புத்திசாலி குரங்குகிட்ட போய் தங்களோட பிரச்னையை தீர்த்துக்கிட நினச்சதுங்க
குரங்குகிட்ட வந்து தங்களோட பிரச்னையை சொல்லுச்சுங்க,பசியில இருந்த குரங்குக்கு அதிர்ஷ்டம் அடிச்ச மாதிரி இருந்துச்சு ,இன்னைக்கு இந்த பூனைகள் கொண்டு வந்த பழ துண்டை தானே திங்கணும்னு முடிவு பண்ணுச்சு
ஒரு திராச எடுத்துட்டு வந்து பழ துண்டை ரெண்டா பிச்சு ரெண்டு தட்டுல வச்சது.ஒரு பக்கம் தட்டு கீழ இறங்குச்சு ,உடனே அடுத்த தட்டுல இருந்த பழ துண்டை எடுத்து ஒரு கடி கடிச்சது
பூனைகளுக்கு ஒரே குழப்பம் தட்ட சரி செய்ய கடிச்சு திங்குதே இந்த குரங்குன்னு நினச்சதுங்க.இருந்தாலும் பிரச்னையை தீக்க குரங்கு செய்றத பாத்துகிட்டே இருந்துச்சுங்க.
ஒவ்வொரு தடவையும் திராசு மேலயும் கீழயும் இறங்குறப்ப பழ துண்டை எடுத்து கடிச்சி தின்னுகிட்டே இருந்துச்சு குரங்கு.
போற போக்க பாத்தா தங்களுக்கு எதுவுமே கிடைக்காதுன்னு நினச்ச பூனைகள் ரெண்டும் ,குரங்காரே நீங்க பங்கு பிரிச்சி கிழிச்சது எல்லாம் போதும் ,மிச்சமிருக்கிற பழ துண்டை எங்க கிட்டயே கொடுங்க நாங்க பாத்துகிறோம்னு சொல்லுச்சு.
அடடா உங்களுக்கு பங்கு பிரிக்கிற வேலைய பாத்ததால எனக்கு கூலியா இந்த மிச்சம் இருக்குற பழ துண்டை எனக்கு வச்சிக்கிறேன்னு சொல்லி மிச்சமிருக்கிற பழ துண்டை எடுத்து கடிச்சி தின்னுடுச்சு
நண்பன்கூட போட்டிபோட்டு அடுத்தவன பழ துண்டை திங்க விட்டுட்டமேன்னு வறுத்த பட்ட பூனைகள் ரெண்டும் வருத்தத்தோடு திரும்பி போச்சுங்க.