story for kids tamil
தமிழ் நீதி கதைகள்
சிறிய குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு மிகவும் பிடிக்கும், அவர்களுக்காக நீதி கதைகள் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Home /Moral Stories
கழுதையும் புலியும், Donkey and Tiger

ஒரு காட்டில், ஒரு கழுதைக்கும் புலிக்கும் வாக்குவாதம்.
கழுதை சொன்னது: புல்லின் நிறம் நீலம் என்று.
புலி சொன்னது பச்சை என்று.
நீண்ட நேரம் வாக்குவாதம் முற்றி யாரும் யாரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
அப்போது இரண்டு விலங்குகளும் சிங்கராஜாவிடம் சென்றன.
சென்ற உடனே, யாரும் பேசும் முன்,

கழுதை "நான் புல்லின் நிறம் நீலம்" என்று சொல்கிறேன்.
இந்த முட்டாள் புலி, பச்சை என்கிறது.
என்று தர்க்கம் செய ஆரம்பித்து விட்டது.
உடனே சிங்கராஜா, புலியை சிறைக்கு அனுப்பி தண்டனை கொடுத்தது.
கழுதை, மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றது.
பின்னர், புலி சிங்கராஜாவை சந்தித்த போது, நடந்த உரையாடல்:

புலி: சிங்கராஜா, புல்லின் நிறம் பச்சை தானே?
சிங்கராஜா: ஆம்
புலி: பின்னர், சரியாக சொன்ன எனக்கு ஏன் தண்டனை கொடுத்தீர்கள்?
நீதி

சிங்கராஜா: உனக்கு சரியாக சொன்னதற்காக தண்டனை கொடுக்கவில்லை.
நீ ஒரு முறை சொல்லி இருக்கலாம், அல்லது இரண்டு முறை சொல்லி இருக்கலாம்.
அதை விட்டு விட்டு, இந்த அற்பமான விசயத்திற்காக,
ஒரு முட்டாள் கழுதையுடன் தர்க்கம் செய்து, இங்கு வரை வந்து,
என் நேரத்தையும், உன் நேரத்தையும் வீணடித்து இருக்கிறாயே..
அந்த முட்டாள்தனத்திற்கு தான்!!